இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி சந்தானம் என்ற கதாபாத்திரத்திலும், ஃபகத் ஃபாசில் அமர் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பிரம்மாண்டமாக இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகின. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ள நிலையில் அதன் உரிமையாளரானஉதயநிதி ஸ்டாலின், "'விக்ரம்' திரைப்படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் படங்கள் வரிசையில் இடம்பிடிக்கும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதனை ரீட்வீட் செய்த கமலஹாசன், " அன்புத்தம்பி உதயநிதி விக்ரம் படம் குறித்தஉங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் கூறியது எனது மற்ற சகோதரர்களையும் உற்சாகப்படுத்தும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.