Advertisment

'விக்ரம்' படத்தில் சூர்யா நடிக்க இதுதான் காரணம்; கமல் சொன்ன சீக்ரெட்

kamalhaasan talk about vikram film surya role

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் விக்ரம் திரைப்படம் வெளியான இது வரைஉலக அளவில்ரூ.200 கோடி வசூல்செய்து சாதனை படைத்து வருகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் 'விக்ரம்' படத்திற்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், " வணக்கம், தரமானத் திரைப்படத்தை தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை. திறமையான தரமான நடிகர்களையும் தான். அந்த வெற்றி வரிசையில் என்னையும் எங்கள் விக்ரம் படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம்" எனக் கூறி விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும் " கடைசி மூன்று நிமிடமே வந்து திரையரங்குகளை அதிர வைத்த என் அருமை தம்பி சூர்யா அவர்கள் அன்பிற்காக மட்டுமேவிக்ரம் படத்தில் நடித்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம் என்று இருக்கிறேன் " எனக் குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசன் நன்றி தெரிவித்து வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

actor surya ACTOR KAMAL HASSHAN vikram movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe