/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1833.jpg)
கடந்த 2006 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. போலீஸ் கதையில் மிகவும் திரில்லான திரைக்கதையுடன் வெளியான இப்படம் கமலின் மாஸ் படங்களில் ஒன்றாக இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு வேட்டையாடு விளையாடு படம் தொடங்கப்படும் என டோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு படம் தொடர்பான எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில் நேற்று வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட கமல்ஹாசனிடம் வேட்டையாடு விளையாடு 2 படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், “வேட்டையாடு விளையாடு 2 பாகம் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் சொன்னார். ஆனால் இடையில் கரோனா வந்து விட்டது, மீண்டும் நடக்கும்” என பதிலளித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)