Advertisment

'விக்ரம்' பட மேடையில் 'இந்தியன் 2' அப்டேட் கொடுத்த கமல்

actor kamalhaasan explain indian 2 movie

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி சந்தானம் என்ற கதாபாத்திரத்திலும், ஃபகத் ஃபாசில் அமர் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை உலகமுழுவதும்வெளியாகவுள்ளது.

Advertisment

இதனிடையே படக்குழு கடந்த ஒரு வாரமாக விக்ரம் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தீவிரமாகஈடுபட்டிருந்தது. அந்தவகையில்விக்ரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசனிடம்இந்தியன் 2 படம் மீண்டும் தொடங்கப்படுமா? அல்லது கைவிடப்படுகிறதா? இந்த படத்தை நீங்கள் இயக்க உள்ளீர்களா? என 'இந்தியன் 2' படம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்குபதிலளித்த கமல்ஹாசன்," இந்தியன் படத்தைநான் இயக்க போவதில்லை. ஷங்கர் தான் படத்தின் இயக்குநர். அவர் தற்போது ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருவதால் இந்தியன் 2 படத்தின் பணிகள் தள்ளிப்போயுள்ளது. ராம் சரண் படத்தின் பணிகள் முடிந்த பிறகு இந்தியன் 2 படத்தின் பணிகள் தொடங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் மீதம் உள்ள படப்பிடிப்பு சில காரணங்களுக்காக நிறுத்தப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

ACTOR KAMAL HASSHAN indian 2 vikram movie
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe