Skip to main content

லோகேஷ் கனகராஜின் பர்த்டே ட்ரீட்... புதிய அறிவிப்பை வெளியிட்ட 'விக்ரம்' படக்குழு

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

kamalhaasan starring vikram movie release update

 

‘மாஸ்டர்’ படத்தின்  வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய்  சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் நிறைவடைந்தது. 

 

இந்நிலையில் படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 14 ஆம் தேதி காலை 7 மணிக்கு 'விக்ரம் படத்தின்' ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்