kamalhaasan starrer earns rs 150 crore 3days world wide

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி 'சந்தானம்' என்ற கதாபாத்திரத்திலும், ஃபகத் ஃபாசில் 'அமர்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை(03.06.2022) வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் விக்ரம் படத்தின் வசூல் குறித்ததகவல் வெளியாகியுள்ளது. கமல் நடிப்பில் வெளியாகியுள்ள 'விக்ரம்' திரைப்படம் இதுவரைஉலக அளவில்150 கோடி வசூல் செய்துள்ளதாகவும். இதில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கைதி படத்தின் கதையையும், விக்ரம் படத்தின் கதையையும் லோகேஷ் கனகராஜ் இணைத்துள்ளதால்விக்ரம் படத்தின் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில்அதிகரித்துள்ளது.

Advertisment