Advertisment

“எனக்கும் ரஜினிகாந்துக்கும் இடையே போட்டி இருக்கிறது” - கமல்ஹாசன்

Kamalhaasan spoke about friendship with rajnikanth

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இந்தியன் 2. கடந்த 1996ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வருகிறது. இப்படம், வருகிற ஜூலை 12ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. இப்படத்தில் சித்தார்த், விவேக், மனோபாலா, பிரியா பவானி சங்கர், ரகுல் பீரித் சிங், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் மூன்றாம் பாகமாக இந்தியன் 3 ஆகவும் வெளியாகவுள்ளது.

Advertisment

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் கமல் உள்ளிட்ட படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், சென்னை, மும்பை எனச் சில இடங்களில் இந்தியன் 2 படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

Advertisment

அந்தவகையில் மும்பையில் ‘இந்தியன் 2’ படம் தொடர்பான புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் ரஜினி உடனான நட்பு குறித்து மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “எங்களுடையது புதிய கூட்டணி அல்ல. நாங்கள் இருவரும் சேர்ந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளோம். அதன் பிறகு சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். நாங்கள் மற்ற போட்டியாளர்கள் போல் கிடையாது. எங்கள் இருவருக்கும் ஒரே குருதான். மற்ற நடிகர்களைப் போலவே எங்கள் இருவருக்கும் இடையே போட்டி இருக்கும். ஆனால், பொறாமை கிடையாது. எங்கள் இருவருடையதும் வெவ்வேறு பாதைகள். மேலும் நாங்கள் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக் கொண்டது கிடையாது. இது நாங்கள் இருவரும்செய்துகொண்ட ஒப்பந்தம்” என்று தெரிவித்தார்.

மேலும் இந்தி ஆடியன்ஸ் குறித்து பேசிய அவர், “எனக்கு பாடம் கற்பித்த இந்தி ரசிகர்களுக்கு நான் முதலில் நன்றி கூறிக் கொள்கிறேன். தமிழ்நாடுதான் எனக்கான இடம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் ஒரு இந்தியன் என்று எனக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் உணர்த்தினீர்கள். ஒரு தென்னிந்திய நடிகனாக இருந்த என்னை, நீங்கள்தான் ஒரு இந்திய நடிகனாக மாற்றினீர்கள். அதற்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என்னுடைய முதல் இந்தி படத்தின்போது எனக்கு இந்தியில் ஒரு வார்த்தைகூட தெரியாது. உங்களுடைய ஆதரவும், கைதட்டலும் இன்றி மீண்டும் இந்த மேடையில் என்னால் தோன்றியிருக்க முடியாது” இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

actor kamal hassan Kamal Haasan indian 2
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe