Kamal replays Simbu question

Advertisment

சிம்பு, 'மாநாடு' படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும், 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாகசித்தி இட்னானி நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனையொட்டி நேற்று(2.9.2022) இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் வெந்து தணிந்தது காடு படக்குழுவினருடன் கமல்ஹாசன், யுவன் சங்கர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். இவ்விழாவில், நடிகர் சிம்பு, கமலிடம் நீங்கள் நடித்த படங்களில் எந்த படத்தைரீமேக் செய்து நான் நடிக்க வேண்டும் என நீங்கள் ஆசைப்பட்டால் அது எந்த படம்? கேள்வி எழுப்பினார். அதற்கு, “நீங்கள் நிறைய படம் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால் ஒரு படம் நடிக்க வேண்டும் என்றால் அது என்னுடன்தான் நடிக்க வேண்டும்” என்று கமல் பதிலளித்துள்ளார்.