ADVERTISEMENT

"நீங்கள் ஒரு நடிப்பு ராட்சசி" - கோவை சரளாவை புகழ்ந்த கமல்

01:17 PM Jun 14, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படத்தின் வசூல் 300 கோடியைத் தாண்டியுள்ளது. இனி வரும் காலங்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே விக்ரம் படத்தின் வெற்றி பெற்றதற்காக நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் பிரபு சாலமன், கோவை சரளா, அஸ்வின் குமார் உள்ளிட்ட செம்பு படக்குழுவினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்போது செம்பு படத்தின் ட்ரைலரை பார்த்து விட்டு படக்குழுவினரை வெகுவாக கமல் பாராட்டியுள்ளார். அத்துடன் செம்பி படத்தில் நடித்துள்ள கோவை சரளாவை நீங்கள் ஒரு நடிப்பு ராட்சசி என்று கமல் புகழ்ந்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT