Skip to main content

“இனிய நண்பனை இழப்பது பெருந்துயர்” - கமல்ஹாசன் உருக்கம்

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

Kamalhaasan mourns her fan

 

கமல்ஹாசனுக்கு இந்தியாவை போன்று  உலகின் பல்வேறு நாடுகளில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கமலுக்கு ரசிகர் மன்றம் அமைத்து அதன் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் மலேசியா கமல் நற்பணி இயக்கத்தின் தலைவர் டத்தோ இந்திரசாகரன் உயிரிழந்துள்ளார். 

 

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் டத்தோ இந்திரசாகரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,"எனது நெடுங்கால நண்பரும், கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் மலேசியத் தலைவருமான டத்தோ இந்திரசாகரனின் மறைவு தாங்கொணாத் துயரத்தை அளிக்கிறது. நற்பணி இயக்கத்தின் சார்பாக மலேசியாவில் உள்ள பல தமிழ்ப் பள்ளிகளுக்கும், வரிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உதவி வந்தார்.

 

தமிழ்ப் பள்ளிகளில் வாசிப்புக் குடில் அமைப்பது, மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குவது, இரத்த தான நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது என மலேசிய மண்ணில் அவர் செய்த சேவைகள் அளவீடற்றவை. செபஸ்தியார் கலைக் கூடத்தின் புரவலராகத் திகழ்ந்த இந்திரசாகரன் போன்ற நற்பணி நாயகனை, மிகச்சிறந்த ரசிகனை, இனிய நண்பனை இழப்பது பெருந்துயர். டத்தோ இந்திரசாகரனை இழந்து தவிக்கும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உறையவைக்கும் காட்சிகள்” - பிரபலங்களின் பாராட்டில் ஆடுஜீவிதம் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
maniratnam kamal praised aadujeevitham movie

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடுஜீவிதம்’ நாவலை, அதே தலைப்பில் மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஆடு மேய்க்கும் தொழிலாளியாகச் சேர்கிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலியை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது. 

இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வருகின்ற 28 ஆம் தேதி இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதில் கமல்ஹாசன், மணிரத்னம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். திரையிடலுக்கு பின் பலரும் படக்குழுவை பாராட்டிய நிலையில் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். 

கமல்ஹாசன் கூறுகையில், “இயக்குநர் பிளெஸ்ஸிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உண்மையாகவே கடின உழைப்பை கொடுத்துள்ளார். கேமராமேனும் சிரமப்பட்டுள்ளார். படக்குழு இவ்வளவு தூரம் செல்வார்கள் என நினைக்கவில்லை. சிறந்த படம் என படமெடுப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். அதை மக்களும் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்” என்றார். மணிரத்னம், பேசுகையில், “உறையவைக்கும் காட்சிகள். ப்ரித்விராஜ் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். மொத்த படக்குழுவும் தான். எப்படி இப்படத்தை உருவாக்கினார்கள் என தெரியவில்லை. அவர்கள் மீது பொறாமை கொள்ளவில்லை. படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என்றார். 

Next Story

‘சண்டை, பிரிவு, அன்பு’ - லோகேஷ் - ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Lokesh Kanagaraj, Shruti Haasan inimel song released

கமலின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் இசையில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் ‘இனிமேல்’. இப்பாடலுக்கு கமல் வரிகள் எழுதியிருக்கும் நிலையில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதன் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். துவர்கேஷ் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த ஆல்பத்தின் டீசர் கடந்த 21ஆம் தேதி வெளியானது. 

டீசரில் லோகேஷ் கனகராஜும், ஸ்ருதிஹாசனும் ரொமான்ஸில் இருக்கும் காட்சிகள் அதிகம் இடம் பெற்றது. இந்த டீசர் சமூக வலைத்தலங்களில் வைரலானது. மேலும் இருவரும் இணைந்து புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருந்தனர். இன்று மாலை 4 மணிக்கு பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி தற்போது இனிமேல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இருவரும் அறிமுகமாவதில் தொடங்கி, காதலர்களாக மாறி திருமணம் வரை சென்று, பின்பு சண்டை, பிரிவு, அன்பு என அனைத்தும் கலந்து சொல்லப்பட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.