Advertisment

"நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே" - டி.ராஜேந்தரை சந்தித்த கமல்ஹாசன் 

kamalhaasan met t rajendar

இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்ட டி.ராஜேந்தர் கடந்த 19 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் டி. ராஜேந்தருக்குவயிற்றில் சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சை தர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும், அதனால்மருத்துவர்களின்அறிவுரையின் படி சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதாகவும்அவரின் மகன் சிம்பு சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து இன்று இரவு மேல் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் டி ராஜேந்தரைநேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தைதனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த கமல்ஹாசன், "நலமுடன் திரும்பி வாரும்சகோதரரே"என்று வாழ்த்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது டி ராஜேந்தரின்இளையமகன்குறளரசன் உடன் இருந்துள்ளார்.

Advertisment

ACTOR KAMAL HASSHAN T Rajendar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe