Advertisment

புனித் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய கமல்

KamalHaasan met family Puneeth Rajkumar expressed his condolences

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார், கடந்த 29 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்தியத்திரைப் பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்ததுடன், நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="2886fcce-956e-4954-a802-d13da459b42f" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/velan-article-inside_12.jpg" />

Advertisment

அந்தவகையில்நடிகர் கமல்ஹாசன் மறைந்தபுனித் ராஜ்குமார்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். கரோனாவில் இருந்து குணமடைந்த நடிகர் கமல்ஹாசன் 'விக்ரம்' படப்பிடிப்பிற்காக பெங்களூரு சென்றுள்ள நிலையில்நேற்று (29.12.2021) புனித் ராஜ்குமார் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

puneeth rajkumar ACTOR KAMAL HASSHAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe