Advertisment

ரோலக்ஸ்க்கு ரோலக்ஸை மாட்டிய கமல்ஹாசன்!

kamalhaasan gifts rolex watch surya

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி 'சந்தானம்' என்ற கதாபாத்திரத்திலும், ஃபகத் ஃபாசில் 'அமர்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்காக லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் கார் ஒன்றையும், படத்தில் உதவி இயக்குநராகபணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 பைக்கை பரிசாக அளித்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கடிகாரத்தைபரிசளித்துள்ளார். படத்தின்வெற்றிக்காக உழைத்தவர்களை மகிழ்விக்கும் வகையில் கமல் செய்துள்ள இந்த செயல் பலரிடமும் பாராட்டுகளைப்பெற்று வருகிறது.

Advertisment

actor surya ACTOR KAMAL HASSHAN vikram movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe