/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/846_2.jpg)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி 'சந்தானம்' என்ற கதாபாத்திரத்திலும், ஃபகத் ஃபாசில் 'அமர்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இப்படம் வெளியான 3 நாளில் 150 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது
இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்குகமல்ஹாசன் அன்பு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். விக்ரம் படத்தின் வெற்றிக்காக கமல்ஹாசன் லெக்சஸ் காரை பரிசளித்து லோகேஷ் கனகராஜுக்குஇன்பதிர்ச்சி கொடுத்துள்ளார். கமலின் ரசிகரான லோகேஷ் விக்ரம் படத்தில் ஒவ்வொரு காட்சிகளையும்செதுக்கி இருக்கிறார். படம் வெளியான நாளிலிருந்து லோகேஷ் கனகராஜுக்குபாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)