Skip to main content

லோகேஷுக்கு கார் வாங்கி கொடுத்தது ஏன்? கமல்ஹாசன் பதில்

Published on 09/06/2022 | Edited on 09/06/2022

 

kamalhaasan explain lokesh kanagaraj gift car

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.

 

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விக்குப் பதிலளித்தனர். அப்போது நிருபர் ஒருவர், உங்களின் நிறையப் படங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்த படங்களின் இயக்குநர்களுக்கு கார் வாங்கி கொடுக்காமல் லோகேஷுக்கு மட்டும் கார் வாங்கி கொடுத்துள்ளீர்கள். எந்த படத்தின் வெற்றியையும் இதுவரை கொண்டாடாத அளவிற்கு விக்ரம் படத்தைக் கொண்டாட என்ன காரணம்? எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, இந்த மாதிரியான செய்திகளை நீங்கள் இப்போதுதான் ஊடகத்தில் வெளியிடுகிறீர்கள். இது போன்று பல வெற்றிப் படங்களுக்கு நடந்திருக்கிறது. ஆனால் என்ன அது அமைதியாக நடக்கும், வெற்றி விழாவும் கூட  அமைதியாகவே நடக்கும். இப்போது தும்மினால் கூட பீரங்கி வெடித்த சத்தம் போல் எதிரொலிக்கிறது. அதற்க்கு காரணம் ஊடக பலம்" எனப் பதிலளித்தார். 

 

நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் என்ற சொகுசு கார் ஒன்றையும், படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு அப்பாச்சி பைக்கையும் பரிசளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்