kamalhaasan congratulated kavin dada movie team for success

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'டாடா' படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் 'டாடா' படத்தின் இயக்குநரை கமல்ஹாசன் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பைத்தொடர்ந்து கவின் மற்றும் படக்குழுவினர் பலரையும் பாராட்டியுள்ளார். இப்படத்தின் இயக்குநர்கணேஷ் கே பாபு கமலின் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர், "என் தாயின் வீட்டிற்கு திரும்பியது போல் உணர்ந்தேன். ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தில் தான் நான் அனைத்தும் கற்றுக்கொண்டேன். கமல் சார், உங்கள் நேரத்திற்கும் வார்த்தைகளுக்கும் நன்றி. மீண்டும் பள்ளிக்குச் சென்று என் மாஸ்டரைச் சந்தித்தேன்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கவின், கமல்ஹாசனுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து "இன்று கோவிலுக்கு சென்றேன்" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் படக்குழுவினர் பலரும் கமலுடன் எடுத்த புகைப்படத்தை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.