Advertisment

"தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவர்" - முதல்வருக்கு கமல்ஹாசன் வாழ்த்து

kamalhaasan birthday wishes for cm stalin

Advertisment

தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை (01.03.2023) இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்து வருகிறார். அப்போது பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், நடிகர் சங்க தலைவரான நாசரும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தார். நாசருக்கு முதல்வர் மரக்கன்று வழங்கினார். மேலும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதல்வர் சார்பில் மரக்கன்று விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ட்விட்டர் பக்கம் வாயிலாகவும் வீடியோ மூலமாகவும் பலரும் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், "முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர், மு.க.ஸ்டாலின் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி, "நீண்ட ஆயுளோடு நிறை செல்வங்களோடு ஓங்கு புகழோடு வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்" எனக் கூறி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாடலாசிரியர் வைரமுத்து, "தமிழ்நாட்டு முதலமைச்சரின் 70ஆம் பிறந்தநாளை முன்னிட்டு அவரை முகாம் அலுவலகத்தில் சந்தித்தேன். நீண்டகாலம் வாழவேண்டும்; வாழும்வரை ஆளவேண்டும் என்று வாழ்த்தினேன். பொன்னாடை பூட்டி நான் எழுதிய புத்தகம் கொடுத்தேன். தலைப்பைப் பார்த்ததும் சில்லென்று சிரித்தார். 'சிகரங்களை நோக்கி'" என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பல்வேறு திரை பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களது வாழ்த்துகளைத்தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

ACTOR KAMAL HASSHAN cm stalin Ilaiyaraaja
இதையும் படியுங்கள்
Subscribe