kamalhaasan and viramuthu wishes ramzan

Advertisment

நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இஸ்லாமியர்களுக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில்நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பிறை பார்த்தலில் தொடங்கி பிறை பார்த்தலில் நிறைவுறும் நோன்புக் காலம் ரமதான். சுய கட்டுப்பாடு, பிறர் மேல் பரிவு, ஈகை, சகோதரத்துவம், நன்மை விழைவு போன்ற பண்புகளைச் சிந்திக்கவைக்கும் காலத்தில், இந்நன்னாளைக் கொண்டாடும் சகோதரர்களுக்கு என் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கமலை தொடர்ந்து கவிஞர் வைரமுத்தும்ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

"மெய்வருத்தம் ஏற்று

சக மனிதனின்

துயர் உணர்கிறது

ஈகையை

வாழ்க்கையின் பாகமாக்குகிறது

சமூக வாகனத்திற்கு

சகோதரத்துவமே

சக்கரம் என்கிறது

உலக நாடுகளின்

கொடிகளிலெல்லாம்

சமாதானப் பூக்களையே

யாசிக்கிறது

ரமலானை

வகுத்தவர்களையும்

வாழ்கிறவர்களையும்

வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment