Advertisment

“எதற்கும் அஞ்சாத துணிச்சல் விஜயகாந்த்தின் அடையாளமாக இருந்தது” - கமல்ஹாசன்

kamalhaasan about vijayakanth

தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்(71) கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் கடந்த 11 ஆம் தேதி வீடுதிரும்பிய அவர் நேற்று மீண்டும் உடல்நிலை பாதிக்கபட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்பு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உயிரிழந்தார்.

Advertisment

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல்சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யபடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனிடையே அவரது மறைவையொட்டி அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.

Advertisment

தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்” என கூறிப்பிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ், “அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன்” என பதிவிட்டுள்ளார். மேலும் பா.ரஞ்சித், வெங்கட் பிரபு, த்ரிஷா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

ACTOR KAMAL HASSHAN vijayakanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe