Advertisment

‘மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்’ - கமல்ஹாசன்

kamalhaasan about operation sindoor

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதக் கும்பல் சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்குமிடையே போர் பதற்ற சூழ்நிலை நீடித்து வந்தது. இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வந்த நிலையில் பாகிஸ்தான் தாக்குதலின் அனைத்து முயற்சியையும் இந்தியா முறியடித்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்த ஒப்புகொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அடுத்து தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே போல், பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும், கடந்த 10ஆம் தேதி இரவு பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மூலம் இந்தியாவில் தாக்குதல் நடத்தியது. அதனை, இந்திய ராணுவம் அழித்து முறியடித்தது. அதன் பின், பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வந்தது

Advertisment

இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இந்திய ராணுவத்துக்கு இந்திய மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், ஆயுதப் படையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “துப்பாக்கிகள் மௌனமாகி, பலவீனமான அமைதி நிலவும்போது, ​​மீதமுள்ளவர்கள் அமைதியை உணர தங்கள் உயிரைக் கொடுத்தவர்களை இந்த தருணத்தில் கௌரவிப்போம். மூவர்ணக் கொடியின் மீது கண்களுடன், கடமை நிறைந்த இதயங்களுடன், ஆபத்தை எதிர்கொள்வதில் அசைக்காமல் உறுதியாக நின்ற நமது துணிச்சலான ஆயுதப் படைகளுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். நீங்கள் எப்போதும் விழிப்புடனும் துணிச்சலுடனும், நமது எல்லைகளையும் நமது அமைதியையும் காக்கும் இந்தியாவின் பெருமை.

இந்திய மக்களுக்காக குறிப்பாக ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள நமது சகோதரர்களுக்கு, உங்கள் மீள்தன்மை அசாதாரணமானது. நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள். உங்களுடன், தேசமும் பெருமையுடன் நிற்கிறது. இந்தியாவின் அனைத்து ஒற்றுமையின் மிகப்பெரிய சக்தியையும் நாங்கள் கண்டோம். மாநிலங்கள், மொழிகள் மற்றும் சித்தாந்தங்களைக் கடந்து, நாங்கள் ஒன்றிணைந்து வலுவாக வெளிப்பட்டோம். இந்திய அரசாங்கத்தின் உறுதியான பதிலடிக்கு நான் பாராட்டுகிறேன், இது இந்தியா பயங்கரவாதத்திற்கு முன் வளைந்து கொடுக்காது என்ற ஒரு தெளிவான செய்தியை உலகிற்கு அனுப்பியது. வெற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒரு வலிமையான நாடு என்பது சிந்திக்கும் நாடே ஆகும். இது வெற்றிக்கான நேரம் அல்ல, மாறாக வலிமையான இந்தியாவுக்கான சேவையில் கற்றுக்கொள்ள, பலப்படுத்த மற்றும் மீண்டும் கட்டியெழுப்ப சிந்தித்துப் பார்ப்பதற்கான நேரம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ACTOR KAMAL HASSHAN Operation Sindoor
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe