1970 மற்றும் 1980-களில் பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரம் மற்றும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை கமலா காமேஷ். குறிப்பாக விசுவின் படங்களில் அதிகம் இடம்பெற்றிருந்தார். மொத்தம் 480 படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட சில படங்கள் நன்கு ஹிட்டடித்ததால் இப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் இவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
ஆனால் கமலா காமேஷ் தற்போது நலமுடன் இருப்பதாக அவரது மகளும் நடிகையுமான ரியாஸ் கான் தற்போது தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் அவரது மாமியார் தான் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இவர் நடிகர் ரியாஸ் கானை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.