Advertisment

“சமூக அநீதிகளுக்கு எதிராக தீரத்துடன் போராடுகிற புரட்சியாளர்” - கமல்ஹாசன்

kamal wishes thiruma

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனின் இன்று தனது 62வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “சமூகக் கொடுமை, ஆதிக்க மனப்பான்மை, வறுமை ஒழிந்த சமத்துவச் சமுதாயம் காணும் நம் பயணத்தில் தோளோடு தோள் நிற்கும் தோழமை, சகோதரர் 'எழுச்சித் தமிழர்' திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து பதிவு பகிர்ந்துள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “இன்று பிறந்த நாள் காணும் என் அன்புத் தம்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் திருமாவளவன். ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்மயப்படுத்திய ஜனநாயகவாதி. சமூக அநீதிகளுக்கு எதிராக தீரத்துடன் போராடுகிற புரட்சியாளர். சமூகநீதிக் கோட்பாட்டை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ளும்படி விளக்கும் ஆற்றல் மிக்க பேச்சாளர். இந்த இனிய நாளில், தம்பி திருமாவளவன் கையில் எடுத்திருக்கும் பெரும்பணிகள் வெல்க என வாழ்த்தி மகிழ்கிறேன். ஜெய் பீம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ACTOR KAMAL HASSHAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe