/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/264_4.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், விக்ரம் உள்ளிட்டோர்களை இயக்கி அப்படங்களை வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றி படங்களாக்கியவர் இயக்குநர் ஷங்கர். இயக்குவது மட்டுமில்லாமல் 'காதல்', 'வெயில்', 'கல்லூரி' உள்ளிட்ட நல்ல படங்களை தயாரித்தும் உள்ளார். ரசிகர்களால் பிரமாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படும் ஷங்கர் தற்போது ராம்சரணின் 'ஆர்சி 15' படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தையும் விரைவில் தொடங்கவுள்ளார்.
இந்நிலையில் ஷங்கர் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம். பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
கமலின் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஷங்கர், "நிச்சயமாக ‘இந்தியரே’. என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது உங்கள் வாழ்த்து. மிக்க நன்றி கமல்ஹாசன் சார்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
நிச்சயமாக ‘இந்தியரே’.
என் பிறந்தநாளை
சிறந்த நாளாக்கியது
உங்கள் வாழ்த்து
மிக்க நன்றி @ikamalhaasan சார்? https://t.co/j6BHuQh7q3
— Shankar Shanmugham (@shankarshanmugh) August 17, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)