kamal wishes kudumbasthan movie crew

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இப்படத்தில் மணிகண்டனைத் தவிர்த்து சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வைசாக் இசையமைத்திருந்த இப்படம் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் தன் மானத்திற்காகவும், தன் குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களை பேசியிருந்தது.

Advertisment

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வளைகுடா ஆகிய நாடுகளில் இப்படம் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியானது. இப்படத்தை பார்த்த பலரும் படக்குழுவினரை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். பாராட்டுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.

Advertisment

முன்னதாக பா.ரஞ்சித் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். இந்த நிலையில் கமல்ஹாசன் இப்படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இதன் புகைப்படங்களை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கமலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ளது.