Advertisment

“ஆவலுடன் காத்திருக்கிறேன்” - ஏ.ஆர் ரஹ்மானுக்கு கமல் வாழ்த்து

kamal wishes ar rahman

திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்குத் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் அமைச்சர் உதயநிதி, “துள்ளல் இசையாலும் - தூய்மையான தமிழுணர்வாலும் நம்மை ஆட்கொண்டிருக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல்நலத்தோடு இன்னும் பற்பல ஆண்டுகள் அவரது இசைப்பயணம் தொடரட்டும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

கமல்ஹாசன் அவரது எக்ஸ் பக்கத்தில், “பிறந்தநாள் வாழ்த்துகள் ஏ.ஆர் ரஹ்மான். உங்களுடன் மீண்டும் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன், மேலும் உங்களிடமிருந்து அனைவருக்கும் சிறந்த இசையை எதிர்பார்க்கிறேன்” என பதிவிட்டுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா, “ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஏ.ஆர் அமீன்இருவருக்கும்பிறந்தநாள் வாழ்த்துகள். எல்லாம் சிறப்பாக அமையவும் வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ், “கடந்த வருடம் எனக்கு ஒரு பெரிய பயணம். உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. அது ஒரு கனவு தருணம். உங்களுடன் இன்னும் நிறைய படங்கள் பணியாற்ற விரும்புகிறேன். லவ் யூ சார்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ACTOR KAMAL HASSHAN ar rahman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe