/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/154_26.jpg)
இந்திய சினிமாவில் முக்கிய ஆளுமையாக விளங்கி வரும் கமல்ஹாசன், நேற்று தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு முதல்வர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் விஜய்யின் மேனேஜரும் தயாரிப்பாளருமான ஜெகதீஸ், லியோ பட பணிகளின் போது கமலுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார். அதில் கமலுடன் விஜய், லோகேஷ் கனகராஜ், லலித் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் படம் லியோ படத்திற்கு கமல்ஹாசன் டப்பிங் பணிகள் மேற்கொண்ட போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இது தொடர்பாக மற்ற புகைப்படங்களைப் பகிரும்படிஒரு ரசிகர் அவரிடம் கேட்க, உடனேகமலும் விஜய்யும் தனியே எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் 'தளபதி 68' படத்தில் நடிக்கிறார். கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)