Advertisment

‘அன்பே சிவம்’ படத்தின் தயாரிப்பாளர் காலமானார்

kama, vijay movie producer Muralidharan passes away

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல் (அன்பே சிவம்), விஜய் (பகவதி) , சூர்யா (உன்னை நினைத்து)உள்ளிட்ட பலரின் படங்களைத்தயாரித்தநிறுவனம் 'லட்சுமி மூவி மேக்கர்ஸ்'. இந்தத்தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர்களில்ஒருவரான முரளிதரன் சமீப காலமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கும்பகோணத்தில் இருந்த தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பு காரணமாக தற்போது காலமாகியுள்ளார். இது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தற்போது சமுக வலைத்தளத்தில் தங்களது இரங்கலைத்தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட படங்களைத்தயாரித்த அவரது நிறுவனம் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'சகலகலா வல்லவன்' படத்தைத்தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

passes away film producer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe