இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் மறைந்த தினம் இன்று (27.7.2023). இந்தியாவின் முதல் குடிமகனாக, ஜனாதிபதியாக உழைப்பால் உயர்ந்த அவரை இன்று அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும்மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், "வான் அறிவியலிலும் வாழ்வியல் நெறிகளிலும் சிறந்து விளங்கிய மாமனிதர், ஒரு பொன்னுலகைக் கனவு கண்டு அதை மாணவ சமுதாயத்திடம் விதைத்துப் போனவர்.சூழியலும் நாட்டின் சூழ்நிலைகளும் மேம்படத்தன் சிந்தனை மொத்தமும் செலவிட்டவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். அந்தப் பெருமனிதரை இந்நாளில் நினைவு கூர்வோம்" எனத்தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.