Skip to main content

மருதநாயகத்தை திரையில் பார்ப்பது எப்போது..? கமல் பதில்!

Published on 05/08/2019 | Edited on 05/08/2019


உலகநாயகன் கமல்ஹாசனின் கனவு திரைப்படமான மருதநாயகம் திரைப்படம் குறித்து மாஸ்டர் சாண்டி எழுப்பிய கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார். கமல்ஹாசன் பல திரைப்படங்களில் நடித்தாலும், அவரது ரசிகர்கள் மத்தியில் மருதநாயகம் திரைப்படம் எப்போது வரும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், இது குறித்த கேள்வி பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது.
 

biggboss



கடந்த வாரம் டாஸ்கில் ஹவுஸ்மேட்ஸ் ஏற்றிருந்த நடிகர்களின் கதாபாத்திரங்களில் இருந்து கமல்ஹாசனிடம் கேள்வி கேட்க விரும்புவதாக கூறினர். அதற்கு சம்மதித்த கமல் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.சிம்புவாக பேசிய சாண்டி, மருதநாயகம் படத்தின் நிலை குறித்து கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு சற்று யோசித்து பதில் கூறிய கமல், மருதநாயகம் படத்தை கொஞ்சம் தான் தன்னால் எடுக்க முடிந்தது. மீதி படத்தை எடுக்க தொழில்நுட்ப உதவியும், வணிக ரீதியான உதவியும் தேவைப்படுகிறது. தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்.உங்களை போல் எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என்றார்.

 

சார்ந்த செய்திகள்