Advertisment

கமலுக்கு சூர்யா, விஜய்க்கு தனுஷ் - லோகேஷின் மாஸ்டர் ப்ளான்

Kamal - Surya  ,   Vijay - Dhanush- Lokesh's master plan in 'Thalapathy 67'

Advertisment

விஜய், 'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'தளபதி 66' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். குடும்ப பின்னணி படமாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ், கமலை வைத்து இயக்கியுள்ள 'விக்ரம்' படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக சிறப்புத் தோற்றத்தில் வரும் சூர்யாவின் காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், லோகேஷின் அடுத்த படத்தில் விஜய்க்கு வில்லனாக தனுஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'தளபதி 66' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் தனுஷை வில்லனாக நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த கூட்டணி உறுதியாகும்பட்சத்தில், விஜய்யும் தனுஷும் இதன்மூலம் முதன்முறையாக இணைய வாய்ப்பிருக்கிறது.

actor dhanush actor vijay lokesh kanagaraj Thalapathy67
இதையும் படியுங்கள்
Subscribe