
மடோன் அஷ்வின் இயக்கும் 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பரத் சங்கர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவியும் புக் செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான நிலையில் அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இப்படத்தை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க ஓகே சொன்னதாகக் கூறப்படுவது நினைவுகூரத்தக்கது.