kamal shankar indian 2 ott update

Advertisment

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வந்த இந்தியன் 2, கடந்த மாதம் 12ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. லைகா தயாரித்திருந்த இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களே பெற்றது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f38c7115-5bb2-4fcf-861d-5280210ece8d" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%281%29_38.jpg" />

சமூக வலைதளங்களில் படத்தின் திரைக்கதை, கமல்ஹாசனின் மேக் அப் குறித்து ரசிகர்கள் எதிர்மறையான விமர்சனங்களை வைத்தனர். குறிப்பாக, இரண்டாம் பாதியில் மிக நீளமாகக் காட்சிகள் வைக்கப்பட்டதாக ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். இதையடுத்து 12 நிமிடக் காட்சிகளைப் படக்குழு நீக்கியது. இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து இந்தியன் 3 படமும் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 9ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெலியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.