Advertisment

“கமல் சார் ஒரு படம் தருகிறேன் என்றிருக்கிறார்” - இயக்குநர் லிங்குசாமி

 Kamal says he will give a film - director Lingusamy

Advertisment

திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் படம் பிகினிங். இப்படம் ஆசியாவின் முதல் ஸ்பிளிட் ஸ்கிரீன் (Split Screen) திரைப்படமாகும். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கவினோத் கிஷன், கௌரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் லிங்குசாமி பேசியபோது, “இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும்...அதாவது,ஒளிப்பதிவாளர் இந்த லென்ஸை உபயோகப்படுத்தினேன் என்றார்;கலை இயக்குநர் புதியதாக ஒன்றை பயன்படுத்தினோம் என்றார். அது தான் புதியதாகப் படம் எடுப்பவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அனுபவம். ஆனந்தம் படம் எடுத்தபோது என்ன உணர்ந்தேனோ,அதை இந்தப் படத்திலும் உணர்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மிகச் சவாலாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது நன்றாகத்தெரிகிறது.

என் இயக்கத்தில் மூன்று மாதங்களில் ஒரு படப்பிடிப்பு ஆரம்பமாகும். உத்தமவில்லன் படத்தைத்திறமையாகக்கடின உழைப்போடு தான் எடுத்தார்கள். ஆனால், அப்படம் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்தது உண்மை தான். முதலில் நாங்கள் முடிவெடுத்தது பாபநாசம் தான். ஆனால், கமல் சார் ஆசைப்பட்டதால் உத்தமவில்லன் படத்தை எடுத்தோம். அது அவருக்கும் தெரியும். உத்தமவில்லன் படத்தின் நஷ்டத்தை ஈடுசெய்ய கமல் சார் எனக்கு ஒரு படம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.” என்று கூறினார்.

directorlingusamy actor kamal hassan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe