Advertisment

தனது திரைப்பயணத்தின் முடிவு குறித்து அறிவித்தார் கமல்

kamal

Advertisment

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள விஸ்வரூபம்-2 படம் திரைக்கு வர தயாராக உள்ளது. இதை தொடர்ந்துசபாஷ் நாயடு, இந்தியன் 2 படங்களில் நடித்து வெளியிட முடிவு செய்திருந்தார் கமல். ஆனால் இதன் படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தபோது திடீரென அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். இதையடுத்து அவர் வருகிற 21ஆம் தேதி அவரது கட்சியின் பெயரை அறிவிப்பதனால், கமல் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும், அதனால் அவர் படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்த தகவல் குறித்து கமல் விளக்கம் அளித்து பேசுகையில்.... "நான் ஒப்பந்தமாகியுள்ள மூன்றுபடங்களை நடித்து முடித்தவுடன், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து யோசிப்பேன். முழுநேர அரசியலில் ஈடுபட்டதும் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் ‘விஸ்வரூபம்-2’, ‘சபாஷ் நாயடு’ மற்றும் ‘இந்தியன்-2’ ஆகிய மூன்று படங்களும் வெளியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது.

kamal kamalhaasan politics viswaroopam2
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe