Advertisment

கமல் படத்தால் கமலுக்கே ஏற்பட்ட சிக்கல்! 

தீவிர அரசியல் ஒரு புறம் இருந்தாலும் டிவி நிகழ்ச்சியிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். சென்ற ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அவர் இந்த ஆண்டும் பிக்பாஸ் சீசன் 2 வை தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கிடையே மூன்றாண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விஸ்வரூபம் 2 வை அடுத்த மாதம் வெளியிட இருக்கிறார் கமல். இதற்காக தான் தொகுத்து வழங்கப்போகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைத்து படத்திற்கு விளம்பரம் செய்தால் அது மக்களிடையே எளிதில் சேரும் என கமல் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து இந்தியன் 2 படப்பிடிப்பையும் தொடங்க திட்டமிட்டிருக்கிறார் கமல். இந்நிலையில் கமல் நடிப்பில் சமீபத்தில் உருவான சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் கமலுக்கு காலில் விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்தினர். இதனையடுத்து நீண்ட நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமலேயே இருந்த நிலையில் தற்போது இப்படத்தினால் கமலின் இந்தியன் 2 படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கமல் நடிப்பில் ஏற்கனவே பாதி படப்பிடிப்பை முடித்த சபாஷ் நாயுடுவின் மீதி படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்தால் தான் அடுத்த படத்தை தொடங்க விடுவோம் என்று தயாரிப்பு தரப்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீதம் இருக்கும் சபாஷ் நாயுடு படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு இந்தியன் 2-ஐ தொடங்கவிருக்கிறது கமல் தரப்பு. இதையடுத்து வரும் ஆகஸ்டில் சபாஷ் நாயுடுவின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

kamalhassan kamal bigboss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe