சரித்திர படத்தில் சிம்பு - கமல் வெளியிட்ட போஸ்டர்

str 48 simbu poster

'பத்து தல' படத்தை தொடர்ந்து தனது 48 வது படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. இப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 9ஆம் தேதி அன்று வெளியானது. பின்பு ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டநிலையில் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.

இப்படத்திற்காக வெளிநாட்டில் சிறப்பு பயிற்சி சிம்பு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. வரலாற்று பின்னணியில் ஆக்ஷன் நிறைந்த மாஸ் படமாக இப்படம் உருவாவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நாளை சிம்புவின் பிறந்தநாள் என்பதால், அவரின் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாகதற்போது புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான கமல்ஹாசன் அவரது எக்ஸ் பக்கத்தில் இந்த போஸ்டரை பகிர்ந்து, சிம்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். போஸ்டரில் தலைப்பு இடம்பெறும் என எதிர்பார்த்த நிலையில் இடம்பெறவில்லை. மேலும் இரண்டு சிம்பு நேருக்கு நேர் மோதத்தயாராக இருக்கும் புகைப்படம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும் வரலாற்று கதைகளில் இருக்கும் கதாபாத்திரம் போல் சிம்புவின் கெட்டப் இருக்கிறது.

ACTOR KAMAL HASSHAN actor simbu desing periyasamy STR 48
இதையும் படியுங்கள்
Subscribe