/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/146_26.jpg)
இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் இயக்குநர் பாரதிராஜா, யோகி பாபு மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் நடிக்கும்படம் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன'. இப்படத்தில் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை வீரசக்தி தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பாடல்களுக்கு வைரமுத்து வரிகள் எழுதுகிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் படத்தின் பின்னணி இசைப் பணிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அப்போது பாரதிராஜா, இயக்குநர் தங்கர் பச்சான் , தயாரிப்பாளர் டி. துரை வீரசக்தி ஆகியோர் உடனிருந்தனர். பாரதிராஜா இப்படம் தமிழ் திரை வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாக இருக்குமென்று கமல்ஹாசனிடம் கூறினார்.
படம் குறித்து நடிகர் கமலஹாசன், "தமிழ் சினிமாவின் பெருமை மிகு படைப்பாளி பாரதிராஜா ஒரு படைப்பை இந்த அளவு புகழ்ந்து பார்த்ததில்லை. இப்படத்தில் நடித்த பிறகு தான் ஓய்வுபெற்று விடலாம் என்று சொல்லும் அளவுக்கு அவர் கூறியது எனக்கு பேராச்சர்யம். இப்பொழுதே உடனடியாக படம் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது. விரைவில் படத்தை காட்டுங்கள்” என்றார். மேலும்இயக்குநர் தங்கர் பச்சானுக்கும், தயாரிப்பாளர் டி. துரை வீரசக்திக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.விரைவில் படத்தின் டீசர் வெளிவருமென தயாரிப்பு குழு அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)