style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
பா.ரஞ்சித் தயாரித்து, மாரி செல்வராஜ் இயக்கிய 'பரியேறும் பெருமாள்' படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பல்வேறு திரையுலக பிரபலங்களும் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசனும் பரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு பா.ரஞ்சித்தையும், இயக்குனர் மாரி செல்வராஜையும் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் 'பரியேறும் பெருமாள்' படம் பார்த்த தன் நண்பர்கள் பலர் போன்செய்து இப்படத்தை பாருங்கள் என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி. இந்த முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள் என்று கமல் வாழ்த்து கூறியுள்ளார். கதிர், ஆனந்தி இணைந்து நடித்துள்ள இப்படத்தில் யோகி பாபு மற்றும் பல புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.