Advertisment

ஜோஜு ஜார்ஜை பாராட்டிய கமல்

kamal praised joju george

ஜகமே தந்திரம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ். இவர் முதல் முறையாக இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘பனி’. இப்படத்தில் சாகர் சூர்யா, அபிநயா, அனூப் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன், சாம் சிஎஸ், விஷ்ணு விஜய் ஆகிய மூன்று பேரும் இசையமைத்திருந்தனர்.

Advertisment

மலையாளத்தில் உருவான இந்தப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றது. இந்த நிலையில், இப்படம் தமிழில் டப் செய்து நாளை(22.11.2024) தமிழகத்தில் வெளியாகவுள்ளது. இதனால் இப்படத்தின் சிறப்பு காட்சி கமல்ஹாசனுக்கு திரையிடப்பட்டது. அப்போது படம் பார்த்தவுடன் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட படக்குழுவினரை கமல் பாராட்டினார்.

Advertisment

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ACTOR KAMAL HASSHAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe