kamal next with manirathnam official announcement released

Advertisment

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தைத்தொடர்ந்து, பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், தனது பிறந்தநாள் பரிசாக அடுத்தபட அறிவிப்பை வெளியிட்டார் கமல்ஹாசன். இதில், சர்ப்ரைஸாக மணிரத்னத்துடன் கைகோர்த்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசனும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க 'ராஜ் கமல்' நிறுவனமும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனமும் தயாரிக்கின்றனர். இசைப் பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொள்கிறார்.

இப்படத்தின் மூலம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ளார் கமல்ஹாசன். இதற்கு முன்னதாக இவர்கள் கூட்டணியில் 1987ஆம் ஆண்டு 'நாயகன்' படம் வெளியானது. இப்படம் தமிழ் சினிமாவின் இப்போது உருவாகிவரும் பல கேங்ஸ்டர் படங்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. மேலும், அந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு இந்தியாசார்பில் அனுப்பப்பட்டது.

Advertisment

இந்நிலையில் கமலின் 234ஆம் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணிரசிகர்களுக்கு சர்ப்ரைசாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. இப்படம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.