நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின்தலைவருமாகிய கமல்ஹாசன், தனது66 வதுபிறந்தநாளைகடந்த 7 ஆம் தேதிகொண்டாடினர். அதை தொடர்ந்து அவருக்குபல்வேறு கட்சிதலைவர்கள், ரசிகர்கள், மக்கள் நீதி மய்யத்தின்தொண்டர்கள் எனபல்வேறு தரப்பினரும்தங்களதுவாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்கமல்ஹாசன் நடிக்கும்விக்ரம் படத்தின் டைட்டில் டீஸர் வெளியிடப்பட்டது.
இந்தநிலையில், தனக்குபிறந்த நாள் வாழ்த்து கூறியஅனைவருக்கும், ட்விட்டர் பக்கத்தில்நன்றி தெரிவித்துள்ள கமல், அடுத்த பிறந்த நாளை கோட்டையில்கொண்டாடுவோம் எனகூறியுள்ளார்.
இதுகுறித்து கமல், "என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்திய ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பிற துறை ஆளுமைகள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என் பிறந்தநாளை 'நற்பணி' தினமாக கொண்டாடிய எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் சகோதரர்களை மனதாரத் தழுவிக்கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு மென்மேலும் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள 'உள்ளும் புறமும்' சீரமைப்பேன். அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம்"என கூறியுள்ளார்.