kamal new look in thug life

நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி வைத்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு செர்பியா, அயர்லாந்து, ராஜஸ்தான், டெல்லி, கோவா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. பின்பு படத்தின் டப்பிங் பணிகளை கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் தொடங்கியிருந்தனர். இதுவரை இப்படத்தில் இருந்து டைட்டில் அறிவிப்பு வீடியோ மற்றும் ரிலீஸ் தேதி டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்ளின் வரவேற்பை பெற்றது.

Advertisment

இதனைத் தொடர்ந்து படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாக நேற்று படக்குழு அறிவித்தது. இது தொடர்பாக வெளியான சிறிய வீடியோவில் கமல், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பாடல் தொடர்பான உரையாடலுக்கு உட்கார்ந்திருக்கும் நிலையில் கமல், ‘ஈசான மூலை’ என சொல்லியிருந்தார். இதன் மூலம் அவர் முதல் பாட்டுக்கு வரிகள் எழுதியுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என மீண்டும் தெரிவித்து படத்திற்கு இன்னும் 75 நாட்கள் தான் இருக்கிறது என புது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கமல் மற்றும் சிம்பு இடம் பெற்றிருக்கும் நிலையில் கமலின் தோற்றம் இதுவரை வெளியான இப்படத்தின் போஸ்டர் மற்றும் முன்னோட்ட வீடியோவில் இருந்து புதிதாக இருந்துள்ளது. இது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

Advertisment