kamal maniratnam thug life update

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் சிம்பு , த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து வழங்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், இருவரும் கால்ஷீட் தொடர்பான பிரச்சனை காரணமாக இப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு சார்பில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதாக படக்குழு அறிவித்திருந்தது. மேலும் சிம்பு, கமல்ஹாசன் ஆகியோர் டப்பிங் பணிகளை தொடங்கிவிட்டதாகவும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் நாசர் மற்றும் அபிராமி இருவரும் நடித்து வரும் நிலையில், தற்போது போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. அதில் இப்படத்திற்கான தோற்றத்துடன் இருவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது.