Advertisment

பூஜையுடன் பணிகளை ஆரம்பித்த கமல் - மணிரத்னம்

kamal maniratnam new project pooja video

Advertisment

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் கமலின் 233வது படமாக உருவாகிறது. இப்படத்திற்காகத் துப்பாக்கி பயிற்சி மேற்கொண்டுள்ளார் கமல். இப்படதிற்குதலைவன் இருக்கிறான் என தலைப்புவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனது 234வது படமாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே மகேஷ் நாராயணன், பா. ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலையில் மணிரத்னம் இயக்கவுள்ள படத்தை கமல்ஹாசனும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனங்கள் தயாரிக்கின்றனர். இசைப்பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில் இப்படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த வீடியோவில் கமல், மணிரத்னம், ஏ.ஆர் ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பரிவ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர். இந்த படத்தின் டைட்டில் டீசர் வருகிற கமல் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி வெளியாக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான படப்பிடிப்பையும் படக்குழு தொடங்கிவிட்டதாகவும் சில நாட்கள் மட்டுமே அது நடப்பதாகவும் கூறப்படுகிறது.இதே நாளில் வினோத் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

ACTOR KAMAL HASSHAN KH 234 maniratnam
இதையும் படியுங்கள்
Subscribe