Advertisment

'தக் லைஃப்' - கேங்ஸ்டராக மீண்டும் சம்பவத்துக்கு ரெடியான கமல்

Advertisment

kamal maniratnam movie titled as thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் கமலின் 233வது படமாக உருவாகிறது. இதையடுத்து தனது 234வது படமாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே மகேஷ் நாராயணன், பா. ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார்.

Advertisment

இதில் மணிரத்னம் படத்தை கமல்ஹாசனும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனங்கள் தயாரிக்கின்றனர். இசைப்பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொள்கிறார். இந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா கமிட்டாகியுள்ளார். மேலும் துல்கர் சல்மானும் ஜெயம் ரவியும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நாளை கமல் பிறந்தநாள் என்பதால் அதனை முன்னிட்டு இந்த வீடியோ வெளியாகியுள்ளது. படத்திற்கு 'தக் லைஃப்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் டைட்டில் அறிவிப்பு வீடியோவில் கமல் அவரது கதாபாத்திரத்தை பற்றி எடுத்துரைக்கிறார். மேலும் தான் கேங்ஸ்டர் எனவும் கூறுகிறார். அதில் கமல் பேசும், 'என் பேரு ரங்கராயன் சக்திவேல் நாயக்கன்...', 'பிறக்கும் போதே என் தலையில எழுதி வச்சிட்டாவோ சக்திவேல் நாயக்கன் கிரிமினல்-னு', 'காலம் என்னை தேடி வந்தது இது முதல் முறை அல்ல...' என வரும் வசனங்கள் அழுத்தமாக உள்ளது. கமல் - மணிரத்னம் கூட்டணியில் 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் படம் கேங்ஸ்டர் ஜானரில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

ACTOR KAMAL HASSHAN KH 234 maniratnam Thug Life
இதையும் படியுங்கள்
Subscribe