Advertisment

மூன்றாவது முறையாக கமலுடன் ஜோடி சேரும் த்ரிஷா

 kamal manirathnam movie trisha is playing female lead character reported

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தைத்தொடர்ந்து, பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படமும் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படமும் கமிட்டாகியுள்ளார்.

Advertisment

35 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்துடன் கமல் கூட்டணிஅமைத்துள்ளதால்ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இப்படத்தை கமல்ஹாசனும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனமும் தயாரிக்கின்றனர். இசை பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொள்கிறார்.

Advertisment

கமல்ஹாசனின்234வதுபடமாக உருவாகும் இப்படத்தில் த்ரிஷாவை கதாநாயகியாக நடிக்கவைக்க முயற்சிகள் நடந்து வருவதாகதகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழு த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் கமலுடன் மூன்றாவது முறையாக த்ரிஷா நடிக்கவுள்ளார். முன்னதாக 'மன்மதன் அம்பு', 'தூங்காவனம்' உள்ளிட்ட கமல் படங்களில் திரிஷா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா நடிப்பில் 'ராங்கி' படம் வெளியாகியுள்ளது. அடுத்ததாக விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் 'தளபதி 67' படத்திலும், அஜித், விக்னேஷ்சிவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும்த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் எனப் பரவலாகப் பேசப்பட்டது நினைவுகூரத்தக்கது.

manirathnam trisha ACTOR KAMAL HASSHAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe