kamal h.vinoth movie officiall announcement

கமல்ஹாசன் தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை முடித்துவிட்டு மணிரத்னம், மகேஷ் நாராயணன், பா. ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளார். இதனிடையே அ. வினோத் அல்லது வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகப் பேசப்பட்டு வந்தது.

Advertisment

இப்படி அவரது அடுத்த பட இயக்குநர்கள் லிஸ்டில் பல பேர் இருக்க அ. வினோத்துடன் இணையும் படம்தான் அடுத்து ஆரம்பிக்கவுள்ளதாகச் சமீபத்தில் தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாகக் கமலும் அ. வினோத்தும் ‘நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்’ அமைப்பின் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினர்.

Advertisment

இப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பு தளத்தில் களமிறங்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டன. மேலும் இப்படம் கமலின் 233வது படமாக இருக்கும் என்றும் இப்படத்தை முடித்துவிட்டு ஏற்கனவே 234வது படத்துக்கு கமிட்டான மணிரத்னம் படம் தொடங்கும் எனக் கூறப்பட்டது. .

இந்நிலையில் கமலின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அ. வினோத் இப்படத்தை இயக்கபடத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஆனால் ஆள்வதற்காக எழுதல் என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் (RISE to RULE) என்ற வாசகத்தை இணைத்துள்ளனர். மேலும் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டது எனப் படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிமுக வீடியோவை சமூக வலைத்தளங்களில் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில்கமல் கையில் தீப்பந்தத்துடன் வருகிறார். இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் மத்தியில்வைரலாகி வருகிறது.