irumbu thirai.jpeg

Advertisment

kamal

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 'மக்களுடன் பயணம்' என்ற பெயரில் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து நேற்று குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் விபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மக்களின் பாராட்டை பெற்றார். கமல்ஹாசன் நேற்று மதியம் குளச்சலில் இருந்து கருங்கல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கருங்கல் அருகே ஆனக்குழியில் ஒரு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 2 பெண்கள் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் கீழே விழுந்த ஒரு பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டது. அந்த பெண்ணை, அவருடன் ஸ்கூட்டரில் வந்த மற்றொரு பெண் தனது மடியில் தூக்கி வைத்துவிட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். இந்நிலையில் அந்த வழியாக சென்ற கமல்ஹாசன் இதனை பார்த்த உடனே அவர் தனது காரில் இருந்து இறங்கி சென்று விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் தனது காரிலேயே அந்த பெண்ணை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வேறொரு காரில் கமல்ஹாசன் ஏறி, தனது பயணத்தை தொடர்ந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனின் உதவியை அங்கு கூடியிருந்த பார்த்த மக்கள் அவரை வெகுவாக பாராட்டினர்.