Kamal Haasan

Advertisment

சென்னையில் செயல்பட்டுவரும் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம், இசையமைப்பாளர் தினா தலைமையில் இயங்கிவருகிறது. இச்சங்கத்தில் 1,500க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த நிலையில், நடிகர் கமல்ஹசானை கௌரவ உறுப்பினர் அட்டை வழங்கி இசைக்கலைஞர்கள் சங்கம் கௌரவித்துள்ளது. திரையிசைத் துறையில் 46 ஆண்டுகாலமாக பல பாடல்களைப் பாடி மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்ததற்காக இந்தக் கௌரவ உறுப்பினர் அட்டை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் அலுவலகத்துக்கு நேரில் சென்ற தினா மற்றும் சங்க உறுப்பினர்கள், கௌரவ உறுப்பினர் அட்டையை அவரிடம் வழங்கினர். இதுகுறித்து இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கமல்ஹாசன் இச்சங்கத்தில் இணைந்திருப்பது சங்கத்திற்கும் இசைக்கலைஞர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.