kamal hassan to join in mohanlal movie

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisment

'இந்தியன் 2' படத்தைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படமும், மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளார். இதனிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில்மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கமலிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதம் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் 13 ஆண்டுகள் கழித்து கமலும் மோகன்லாலும் இணைந்து நடிக்கவுள்ளனர். முன்னதாக 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.